Hey Pressto! Conference 2020

A WordPress and ClassicPress conference which happens only on Twitter

தமிழ்

Hey Pressto! என்பது ClassicPress மற்றும் WordPress கூட்டிணைப்பில் Twitter-இல் நடத்தப்படுகின்ற ஒரு கருத்தரங்கு.

Hey Pressto! பிரசெண்டேஷன்கள் நிமிடத்திற்கு ஒன்று வீதம் அதிகபட்சம் 15 ட்வீட்கள் கொண்டு இருக்கலாம்.

Hey Pressto! கருத்தரங்கு அனைவராலும் அணுகத்தக்க வகையில் இருக்க வேண்டும் என்ற நோக்குடன் மேற்கொள்ளப்படுகிறது. இதை மேம்படுத்துவது குறித்த கருத்துகளை நீங்கள் தயங்காமல் எங்களுக்குத் தெரிவிக்கலாம்.

Hey Pressto! கருத்தரங்கில் உங்கள் தளம் குறித்தும் அனுபவங்கள் குறித்தும் அறிய விரும்புகிறோம். உங்கள் தளத்தில் இலட்சக்கணக்கான இடுகைகள் இருந்தாலும் சரி, ஒரே ஒரு சிறப்புமிக்க இடுகை மட்டுமே இருந்தாலும் சரி, இப்போதுதான் உங்கள் முதல் இடுகையைப் பதிவு செய்திருந்தாலும் சரி, நீங்கள் சிறப்பாக எதைச் செய்திருந்தாலும் தயங்காமல் எங்களுக்குத் தெரிவியுங்கள்.

ClassicPress அல்லது WordPress பயன்படுத்துகின்ற சிறப்பானதைச் செய்கின்ற டெவலப்பர்களாகட்டும், சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகளை அடிக்கடி நடத்துகின்ற நபர்களாகட்டும், நிர்வாகத்தில் அக்கறை கொண்டவர்களாகட்டும், முக்கியமாக உங்களைப் போன்ற நபர்களுக்காக Hey Pressto! கருத்தரங்கு மேற்கொள்ளப்படுகிறது.

சமநிலையற்ற கட்டமைப்பு கொண்ட ஓர் உலகில் இருக்கிறோம் என்பதை Hey Pressto! கருத்தரங்கு அறிகிறது. மேலும் அதை நம்மால் மட்டுமே சரிசெய்ய முடியாது. அங்கீகரிக்கப்படாத மற்றும் உதாசீனப்படுத்தபட்ட மக்களின் அறிவைக் கொண்டாடுவதற்கான ஒரு நிகழ்வாக இது இருக்க விரும்புகிறோம்.

Hey Pressto! கருத்தரங்கு 12 மணிநேரம் நடைபெறும். இதனால் உலகில் எந்த இடத்தில் இருந்தும் நீங்கள் சிறிதுநேரம் இதில் பங்கேற்றிட முடியும் என்று நம்புகிறோம்.

Hey Pressto! கருத்தரங்கிற்கு எந்த மொழியிலும் உங்கள் சமர்ப்பிப்புகளையும் பிரசெண்டேஷன்களையும் செய்யலாம். அனைத்து மொழிகளும் வரவேற்கப்படுகின்றன.

Twitter அனைவருக்கும் ஏற்ற தளமாக இருக்காது என்பதை நாங்கள் அறிகிறோம். நீங்கள் விரும்பினால், Hey Pressto!-வின் அநாமதேயக் கணக்குகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Hey Pressto! அநாமதேய வழிகாட்டுதல் சேவையை இலவசமாக வழங்குகிறது. சமர்ப்பிப்புகளைச் செய்வதில் உதவி தேவைப்பட்டால், அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Hey Pressto! கருத்தரங்கிற்கான சமர்ப்பிப்புகள் ட்வீட்டைப் போன்று 280 எழுத்துக்குறிகளுக்குள் இருக்க வேண்டும்.

எங்களின் சமர்ப்பிப்புப் பக்கத்தைப் ( https://2020.heypresstoconf.org/submit/) பார்வையிட உங்களை அழைக்கிறோம். உங்கள் அனுபவம், தகவல் மற்றும் கதைகளைப் பகிர்வதில் உதவி தேவைப்பட்டால், எங்களுக்குத் தெரிவியுங்கள்.

Hey Pressto! கருத்தரங்கில் நீங்கள் இணைவீர்கள் என்று எதிர்நோக்குகிறோம்.

Hey Pressto! பற்றி உங்கள் நண்பர்களிடம் கூறுவீர்கள் என்று நம்புகிறோம்.

இதை வாசித்ததற்காக Hey Pressto! குழு உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்!

Do NOT follow this link or you will be banned from the site!